முதல்வர் மு.க.ஸ்டாலின்  
தற்போதைய செய்திகள்

குவைத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

குவைத் நாட்டில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

DIN

குவைத் நாட்டில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில்,

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், மங்கலம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முகமது யாசின் மற்றும் முகமது ஜுனைத் ஆகிய இருவரும் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடும் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவதற்காக இருவரும் தங்கியிருந்த அறையில் தீ மூட்டியதாகவும், நீண்ட இரவின் காரணமாக தீயை அணைக்காமல் அப்படியே உறங்கியதால் நெருப்புப் அணைந்து ஏற்பட்ட புகையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர்.

இருவரது உடல்களும் கடந்த 22 ஆம் தேதி குவைத் நாட்டிலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்!

இடம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு

மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

தமிழக புதிய டிஜிபியை தோ்வு செய்ய எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை: யுபிஎஸ்சி தகவல்

மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு

SCROLL FOR NEXT