ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: சென்னையில் ஒருவர் கைது!
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தவரை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த அல்பாசித் என்பவரை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ)அதிகாரிகள் சென்னையில் இன்று(ஜன. 28) கைது செய்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ்-உடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் நடைபெற்ற சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது.
சென்னை புரசைவாக்கம் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடம் மற்றும் மயிலாடுதுறையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை செய்த அல்பாசித் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று(ஜன. 28) காலை கைது செய்தனர்.
இவர் மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசல் பகுதியைச் சேர்ந்தவர். சென்னையில் 8 மாதங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்துக்கொண்டே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் அல்பாசித் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அல்பாசித்தை கைது செய்துள்ளனர்.