மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது. 
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியில் இருந்து 19,286 கன அடியாக அதிகரித்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியில் இருந்து 19,286 கன அடியாக அதிகரித்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது மழை தணிந்ததால் வியாழக்கிழமை (ஜூலை 3) நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக குறைந்தது.

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெள்ளிக்கிழமை(ஜூலை 4)வினாடிக்கு 18,615 கன அடியில் இருந்து 19,286 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாகவும், உபரி நீர் போக்கி வழியாக என மொத்தம் 24,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்வரத்தை அதனை விட அதிகளவில் நீர் திறப்பு இருப்பதால், அணையின் நீர்மட்டமும் 119.80 அடியில் இருந்து 119.60 அடியாக குறைந்துள்ளது.

நீர் இருப்பு 92.83 டிஎம்சியாக உள்ளது.

The water flow into Mettur Dam increased from 18,615 cubic feet per second to 19,286 cubic feet per second.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திரன் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழி ஏற்பு

கல்லூரியில் கருத்தரங்கம்

தமிழ் வளரச் செய்தவா் தம்பிரான் சுவாமிகள்

‘சுயமரியாதையுடன் வாழ கல்வியே துணை நிற்கும்’

SCROLL FOR NEXT