முகப்பு
தற்போதைய செய்திகள்

மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவு

மியான்மரில் சனிக்கிழமை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

Updated On : 19 ஜூலை, 2025 at 3:19 AM
பகிர்:

மியான்மரில் சனிக்கிழமை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின்படி, மியான்மரில் சனிக்கிழமை அதிகாலை பூமிக்கடியில் 105 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 அலகுகளாகப் பதிவானது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம், பாதிப்பு குறித்த எந்த தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் பூமிக்கடியில் 110 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகி இருந்தது.

இதுபோன்ற கடந்த 17 ஆம் தேதி பூமிக்கடியில் 80 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவாகியிருந்தது.

இந்த மாதத்தில் ஏற்பட்ட நான்காவது நிலநடுக்கம். ஜூலை 1 ஆம் தேதி பூமிக்கடியில் 135 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியிருந்தது.

மியான்மர் பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடாக இருந்தாலும், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிகாரப்பூர்வ தேசிய நிலநடுக்க ஆபத்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

summary

An earthquake of magnitude 3.7 jolted Myanmar on Saturday, a statement by the National Center for Seismology (NCS) said.

முழு கட்டுரையைப் படிக்க →