கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

கரோனா: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி தமிழக சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்கள்...

DIN

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவும் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-யைக் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 8 பேர் உள்பட தற்போது 221 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்று வராமல் தடுக்க கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு கருதி மக்கள் முகக்கவசம் அணிவது அல்லது. குறிப்பாக கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். கர்ப்பிணிகள், உடல்வலி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நெருக்கமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் தங்கள் ஆரோக்கியத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கரோனாவுக்கு எந்த ஒரு மருந்தையும் சுகாதாரத் துறை அங்கீகரிக்கவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களின்படி கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, தவறான தகவலைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

கரோனாவுக்கு நாட்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதாக தவறான தகவல் பரவி வந்த நிலையில் சுகாதாரத்துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

4 ஆண்டுகளில் 33,987 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசுக் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். சோ்க்கை பதிவு செப். 30 வரை நீடிப்பு

மும்பையில் கொட்டித் தீா்த்த மழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

அதிமுக வாக்குகள் விஜய்க்கு போகாது: டி.ஜெயக்குமாா்

SCROLL FOR NEXT