டொனால்டு டிரம்ப்புடன் எலான் மஸ்க்  AP
தற்போதைய செய்திகள்

டிரம்ப் - மஸ்க் இடையே முற்றும் மோதல்: செய்திகள் நேரலை!

இன்றைய முக்கிய செய்திகள் நேரலையாக...

DIN

முற்றும் மோதல்

அமெரிக்க செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வரி மற்றும் சலுகை மசோதாவை தொழிலதிபர் எலான் மஸ்க் கடுமையான விமர்சித்திருந்தார்.

எலான் மஸ்க்கின் விமர்சனம் ஏமாற்றம் அளிப்பதாகவும், மற்றவர்களைவிட மஸ்க்கிற்கே மசோதாவில் இருக்கும் அம்சங்கள் தெரியும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், டிரம்ப்புக்காக தான் நிறைய நன்மைகள் செய்திருப்பதாகவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

மஸ்க்கின் ஒப்பந்தம் ரத்து?

நமது பட்ஜெட்டில், பில்லியன் கணக்கான டாலர்களை சேமிப்பதற்கான எளிதான வழி, எலான் மஸ்க் நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மஸ்க், எனது நிறுவனத்தின் ஒப்பந்தத்தை அரசு நிறுத்தினால், டிராகன் விண்கலம் உடனடியாக தனது பணியை நிறுத்தும் என பதிலளித்துள்ளார்.

நான் இல்லையென்றால்...

நான் இல்லையென்றால் தேர்தலில் டிரம்ப் தோல்விடைந்திருப்பார், அவருக்கு நன்றியுணர்வு இல்லை என்று மஸ்க் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க...

4 பேர் கைது

பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில், 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆர்சிபி மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் நிகில், டிஎன்ஏ நிறுவனத்தின் மேத்யூ, கிரண் மற்றும் வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் படிக்க...

நடிகரின் தந்தை பலி

தருமபுரி அருகே ஏற்பட்ட கார் விபத்தில் நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை வெள்ளிக்கிழமை காலை பலியானார்.

நடிகர் சைன் டாம் சாக்கோ, அவரது தாய், சகோதரர் மற்றும் ஓட்டுநர் காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் படிக்க...

5,000-ஐ கடந்தது!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 498 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 5,364 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4,724 ஆக உயர்ந்துள்ளது.

ரெப்போ வட்டி குறைப்பு

ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் நிலையில், 6 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமானது.

ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் 0.25 சதவிகிதம், ஏப்ரல் மாதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

செனாப் பாலம் திறப்பு

ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, நாட்டின் முதலாவது கம்பி வட அன்ஜி ரயில் பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் படிக்க...

நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் படிக்க ....

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியவும் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் படிக்க....

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்...

பிரதமர் மோடி சரணடையும் பழக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பாஜகவின் அரசியல் முடிந்துவிடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும் படிக்க...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காத்மாண்டுவில் கனமழை: 3 நாள்களுக்கு வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வில் முன்னணியில் எஸ்.ஏ. கல்விக் குழுமம்!

கடலோர காவல் படைக்கு புதிய ரோந்துக் கப்பல் அர்ப்பணிப்பு!

பிகாரில் இளைஞர்களுக்கு ரூ.62,000 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டும்! - முதல்வர் உறுதி

SCROLL FOR NEXT