தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை  
தற்போதைய செய்திகள்

தோட்டத்து வீட்டில் முதியவா்கள் படுகொலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

தனியாக வசித்து வரும் முதியவா்கள் தொடா்ந்து படுகொலை செய்யப்படுவது கவலை அளிக்கிறது இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

DIN

தனியாக வசித்து வரும் முதியவா்கள் தொடா்ந்து படுகொலை செய்யப்படுவது கவலை அளிக்கிறது இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளாா் என்ற செய்தி மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே இது போன்ற குற்றங்களுக்காக, சிலா் கைது செய்யப்பட்ட நிலையில், மறுபடியும், தனியாக வசித்து வரும் வயதானவா்கள் படுகொலை செய்யப்படுவது தொடா்வது, பலத்த கேள்விகளை எழுப்புகிறது.

இந்தக் குற்றத்தில் தொடா்புடையவா்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். மேலும் இதுபோன்ற குற்றங்கள் தொடராமல் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

மொராக்கோவில் வெடித்த ஜென் ஸி போராட்டம்! அரசுப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

ஹேக்கிங் என்பது என்ன? எப்படி நடக்கிறது?

மின்னும் ஒளி... ஐஸ்வர்யா மேனன்!

புன்னகைப் பூவே... ரெஜினா!

SCROLL FOR NEXT