மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் 
தற்போதைய செய்திகள்

விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும்: அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்

எளிதில் பயிரிடக்கூடிய பழங்கள் மற்றும் பயிர்களை நோக்கி விவசாயத்தை பல்வகைப்படுத்துவது துறையின் வளர்ச்சிக்கு அவசியம் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கூறினாா்.

DIN

பெங்களூரு: எளிதில் பயிரிடக்கூடிய பழங்கள் மற்றும் பயிர்களை நோக்கி விவசாயத்தை பல்வகைப்படுத்துவது துறையின் வளர்ச்சிக்கு அவசியம் என்றும், விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கூறினாா்.

'விக்ஸித் க்ரிஷி சங்கல்ப் அபியான்' திட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூரு வந்த சௌஹான், டிராகன் பழத்தை பயிரிடுவதன் நன்மைகள் குறித்து தெரிவித்தார்.

டிராகன் பழ விவசாயத்திற்கு ரசாயன உரங்கள் தேவையில்லை, இது ஒரு கரிம பயிர்.

கற்றாழை குடும்பத்தைச் சேர்ந்த டிராகன் பழம் பயிர்கள் மீது நோய் தாக்குதல் குறைவு, உற்பத்திச் செலவு குறைவு மற்றும் சாகுபடியின் முதல் ஆண்டிற்குப் பிறகு விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6 முதல் 7 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும் என்று அமைச்சர் சௌஹான் கூறினார்.

மேலும், அமெரிக்காவுடனான வேளாண் வா்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியா கண்ணை மூடிக்கொண்டு செயல்படாது. நமக்கான லாப-நஷ்ட கணக்குகளை மதிப்பீடு செய்த பிறகே, ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.

அந்த வகையில், இந்திய விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதில் தெளிவாக இருக்கிறோம். இரு நாடுகள் குறித்து பேசும்போது, ஒட்டுமொத்தமாக வா்த்தகத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பக்தி மழை பொழியும் தியா!

திரைக்கதிர்

வாழ்வியலை சித்திரிக்கும் கல்வெட்டுகள்

ஒரு கோடி பனை விதை நடும் பணி: செப்.24-ல் மன்னாா்குடியில் தொடக்கம்

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT