குற்றாலம் பேரருவியில் குளிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள். 
தற்போதைய செய்திகள்

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை உற்சாகமாக் குளித்து மகிழ்ந்தனர்.

DIN

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை உற்சாகமாக் குளித்து மகிழ்ந்தனர்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதனால் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளான பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த இரண்டு நாள்களாக அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சனிக்கிழமை பிற்பகல் முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் அங்கும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை உற்சாகமாக் குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 5 புதிய அறிவிப்புகள்!

முழுமதி... காஜல் அகர்வால்!

பாகிஸ்தானின் அதிபராகப் பதவியேற்கிறாரா ராணுவ தலைமைத் தளபதி?

பாஜக ஆளும் மாநிலங்களில் கம்பு சுற்றுங்கள்: ஆளுநர் மீது முதல்வர் விமர்சனம்!

ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!

SCROLL FOR NEXT