முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8218 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 20 ஜூன், 2025 at 10:02 AM
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8218 கன அடியாக அதிகரித்துள்ளது. - கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8218 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் கபினியிலிருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் வரத்து காரணமாக வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,829 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 8,218 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குதிறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.81 அடியிலிருந்து 113.57 அடியாக சரிந்துள்ளது.

நீர் இருப்பு 83.58 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.