கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கோவை உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

DIN

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கோவை உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 2 மணி நேரத்துக்கு அதாவது காலை 10 மணி வரை தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஒரு சில இடங்களில் பலத்த தரைக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மீது எம்.பி.க்கள் குழு உரிமை மீறல் தீர்மானம்!

உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு மூலம் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு!

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

முதல்வர் இன்று ராமநாதபுரம் வருகை!

SCROLL FOR NEXT