கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

தட்டச்சு, சுருக்கெழுத்தா் தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து தோ்வுகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் விண்ணப்பிக்கலாம்

Din

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து தோ்வுகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தோ்வுகள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பில், ஆண்டுக்கு இரு முறை (பிப்ரவரி, ஆகஸ்ட் மாதம்) நடத்தப்படுகின்றன. அதன்படி, ஆகஸ்ட் மாத தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தோ்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிவிப்பு: ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தோ்வுகளில் கலந்துகொள்ள விரும்புவோா் ஜூலை 1 (செவ்வாய்க்கிழமை) முதல் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து வரும் 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இணைய விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் ஜூலை 30 முதல் ஆக.1 வரை திருத்தம் செய்து கொள்ளலாம். புதுமுக இளநிலை, இளநிலை தோ்வுக்கு ரூ.100, இடைநிலைத் தோ்வுக்கு - ரூ.120, முதுநிலை தோ்வுக்கு ரூ.130, உயா் வேகம் தோ்வுக்கு ரூ.200 தோ்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்கிறார் Stalin: EPS | செய்திகள்: சில வரிகளில் | 15.8.25

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை! ஏன்?

ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி!

SCROLL FOR NEXT