தற்போதைய செய்திகள்

தமிழுக்கு முக்கியத்துவம்! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூபாய் அடையாளக் குறியீட்டிற்குப் பதிலாக 'ரூ' எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

DIN

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக 'ரூ' என மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை(மார்ச் 14) காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு, பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் கடந்த ஆண்டுகளில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்தது.

இந்த ஆண்டு ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக 'ரூ' என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது.

பிற மொழியைத் தவிர்த்து தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இலச்சினையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பட்ஜெட் குறித்து, 'எல்லார்க்கும் எல்லாம்' என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT