சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் குறைகளைக் கேட்டறியுமாறு அனைத்து மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் கோரியிருந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கட்சிகளின் கருத்துகளை அறிய தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கற்குமாறு தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் எழுதியிருந்தாா்.
இந்த நிலையில், தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் , பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.