கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் மூத்த அரசியல் தலைவர் பலி!

ஹமாஸின் மூத்த அரசியல் தலைவர் கொல்லப்பட்டதைப் பற்றி...

DIN

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த அரசியல் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவின் கான் யூனிஸ் பகுதியின் மீது நேற்று (மார்ச் 22) நள்ளிரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் போராளிக்குழுவின் மூத்த அரசியல் தலைவரும் பாலஸ்தீன நாடாளுமன்றத்தின் உறுப்பினருமான சலாஹ் பர்தாவில் (வயது 65) மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு இன்று (மார்ச் 23) அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹமாஸின் முக்கிய கூட்டாளிகளாகக் கருதப்படும் யேமன் நாட்டைச் சேர்ந்த போராளிக்குழுவினர் இஸ்ரேல் மீது மற்றொரு ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க: சூறாவளி தாக்கிய அமெரிக்க மாகாணத்தில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

இதனால், அந்நாடு முழுவதும் அபாய சங்கு ஒலித்த நிலையில் அந்த ஏவுகணையைத் தகர்த்துவிட்டதாகவும் அதனால் எந்தவொரு உயிர் மற்றும் பொருள் சேதங்களும் ஏற்படவில்லை என இஸ்ரேல் நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து காஸா மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இதனால், இஸ்ரேல் மீதான தனது தாக்குதலை யேமனின் ஹவுதி படையினர் மீண்டும் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT