கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

ஜெர்மனி, ஆஸ்திரியா அமைச்சர்களின் சிரியா பயணம் ரத்து!

ஜெர்மனி, ஆஸ்திரியா அமைச்சர்களின் சிரியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் சிரியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேஸர் மற்றும் ஆஸ்திரியா நாட்டின் உள்துறை அமைச்சரான கெர்ஹார்டு கார்னர் ஆகியோர் ஜெர்மன் ராணுவ விமானத்தில் ஜோர்டானிலிருந்து சிரியாவிற்கு இன்று (மார்ச் 27) காலை பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த விமானம் ஜோர்டான் தலைநகர் அம்மானிலிருந்து புறப்படும் முன்னர் பாதுகாப்பு காரணங்களினால் அவர்களது பயணமானது ரத்து செய்யப்பட்டதாக ஜெர்மனி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிரியாவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறக்கூடும் என ஜெர்மன் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தப் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை நிராகரிக்க முடியாது எனவும் இத்தகைய அச்சுறுத்தலுடன் அவர்களது பயணத்தை தொடர்வது பொறுப்பான முடிவாக இருக்காது என ஜெர்மன் வெளியுறவுத் துறை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பயணமானது முன்கூட்டியே அறிவிக்கப்படாத நிலையில், இரு நாடுகளின் அமைச்சர்களும் சிரியாவின் இடைக்கால அரசின் அமைச்சர்கள் மற்றும் ஐ.நா. நிவாரண அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

முன்னதாக, கடந்த 14 ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரினால் அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோர் ஜெர்மனியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் 13 ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் சிரியாவில் ஜெர்மனியின் தூதரகத்தை ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலேனா பேர்போக் மீண்டும் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இஸ்ரேலின் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 6 பாலஸ்தீனர்கள் பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

மானூரில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவா்கள் போராட்டம்

முக்கூடலில் சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT