தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு ஹிந்தியிலும் வழங்கப்படுவதற்கு மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை ஹிந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத மத்திய அரசு, பேரிடர் முன்னறிவிப்பில் ஹிந்தியைத் திணிக்கிறது.
பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் வானிலை அறிக்கையில் ஹிந்தியைத் திணித்திருப்பது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.