தஞ்சைப் பெரிய கோயில் 
தற்போதைய செய்திகள்

தஞ்சையில் மே 7ல் உள்ளூர்‌ விடுமுறை!

தஞ்சை மாவட்டத்தில் மே 7ல் உள்ளூர் விடுமுறை..

DIN

தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுவதால் மே 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே 7ஆம் நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு அன்றைய தினம் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 24-ஆம் தேதி அலுவலகங்கள் செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT