தில்லியில் மோசமான வானிலை காரணமாக 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டன 
தற்போதைய செய்திகள்

தில்லியில் மோசமான வானிலை: 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டன, 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றால் மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன, 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன

DIN

புது தில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றால் மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன, 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இரண்டு விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒன்று அகமதாபாத்திற்கும் திருப்பி விடப்பட்டதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

விமான கண்காணிப்பு வலைத்தள தரவுகளின்படி, 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி சர்வதேச விமான நிலையம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் 5 மணிக்கு வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மோசமான வானிலை காரணமாக சில விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மோசமான வானிலை காரணமாக விமான நடவடிக்கைகளில் சில பாதிப்புகள் இருந்தததாகவும், தற்போது விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன என தெரிவித்துள்ளது.

வட இந்தியாவின் சில பகுதிகளில் மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

தில்லிக்கு வரும் மற்றும் புறப்படும் சில விமானங்கள் சேவைகள் தாமதமாகியுள்ளன அல்லது திருப்பி விடப்படுகின்றன, இதனால் ஒட்டுமொத்த விமான சேவைகளுக்கான அட்டவணை பாதிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள ஏர் இந்தியா, இடையூறுகளைக் குறைக்க எங்கள் தரப்பில் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.

மேலும், பயணிகள் தங்களின் பயணத்திற்கு முன்பாக, விமான சேவைகளின் விவரங்களை அறிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாட்டின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையமாகும், இது நாள்தோறும் சுமார் 1,300 விமான இயக்கங்களைக் கையாண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலியர்றளர் பொல்கி... மடோனா!

அழகிய லைலா... ரித்திகா நாயக்!

புன்னகை பட்டு... பிரக்யா நாக்ரா!

மல்லிகை மொட்டு... அனுபமா பரமேஸ்வரன்!

டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்குமா? என்ன செய்யப் போகிறார்? இன்னும் சில நாள்களே!

SCROLL FOR NEXT