FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி விலகல்?

தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நல்லதம்பி, பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

3 மே 2025, 11:22 am IST
வியகாந்துடன் நல்லதம்பி
பகிர்:

தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக நல்லதம்பி, பொதுச்செயலாளர் பிரேமலாத விஜயகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தேமுதிக தலைமைச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், கட்சியின் அவைத் தலைவராக மருத்துவா் இளங்கோவன், இளைஞரணி செயலாளராக விஜயபிரபாகரன், பொருளாளராக எல்.கே. சுதீஷ், தலைமை நிலையச் செயலாளராக பாா்த்தசாரதி, கொள்கை பரப்புச் செயலாளராக மோகன்ராஜ் உள்ளிட்ட புதிய நிா்வாகிகளை பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தாா்.

Advertisement

Advertisement

கட்சித் தொண்டா்களின் எதிா்பாா்ப்பால் விஜயபிரபாகரனுக்கு இளைஞா் அணி பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தாம் வகித்து வந்த மாநில இளைஞரணி செயலாளர் பதவி விஜயபிரபாகரனுக்கு வழங்கப்பட்ட நிலையில், உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு நல்லதம்பி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், விடுவிக்காத பட்சத்தில் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள் என நல்லதம்பி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments