முகப்பு
நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினாா் நாகேந்திரன்
தற்போதைய செய்திகள்

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓரணியில் திரள வேண்டும்

தற்போதைய செய்திகள்

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓரணியில் திரள வேண்டும்

Updated On : 22 மே, 2025 at 8:11 AM
நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினாா் நாகேந்திரன்
பகிர்:

திருநெல்வேலி: திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓரணியில் திரள வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான பிரச்னைகளுக்குப் பின்னால் பாஜக இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வெள்ளித்தேர் திருப்பணிக்கு ஒரு கிலோ வெள்ளியை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

நெல்லையப்பர் திருக்கோயில் புதிய வெள்ளித்தேர் திருப்பணிக்காக பக்தர்களால் 175 கிலோவுக்கு மேல் வெள்ளி உபயமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நானும் ஒரு கிலோ வெள்ளி வழங்கியுள்ளேன். நெல்லையப்பர் கோயிலில், பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அமைச்சராக இருந்தபோது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் திருப்பணிக்கு அனுமதி பெற்று 2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

புதிய யானை

நெல்லையப்பர் கோயிவிலுக்கு புதிய யானை வாங்குவது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில முதல்வருடன் பேசப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி புதிய யானை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .

பாஜக கூட்டணியில் பாமக தொடர வேண்டும்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்றுசேர வேண்டும். பாஜக கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓரணியில் திரள வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்

பாஜக - அதிமுக கூட்டணி உடைந்துவிடும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் எண்ணம். ஆனால் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதல்வர் மு.க. ஸ்டாலின் களத்தில் இருப்பதாகவும், தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த பெரும்பாலானவற்றை முதல்வர் நிறைவேற்றாத நிலையில், சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குற்றம் சாட்டினார்.

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் திட்டம்

மேலும், மீதமுள்ள 10 மாத கால ஆட்சியில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்றால், வரவிருக்கும் பாஜக ஆட்சியில் அது நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார். புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்போது பல்வேறு எதிர்ப்புகள் இருப்பது இயல்புதான் என்றும், ஆதார் அட்டை கொண்டு வந்த போதும் பல சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது, தற்போது தங்க நகைக்கான பல்வேறு விதிமுறைகளும் சிக்கல்கள் இல்லாமல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம்

தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் முஸ்லீம்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டது அல்ல என்றும், அண்டை நாடுகளிலிருந்து மேற்கு வங்கத்தின் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்தார். நாட்டில் உள்ள எந்த முஸ்லீம்களுக்கும் அந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →