இந்திய விடுதலைப் போராட்ட போராளி வீர் சாவர்க்கர் 
தற்போதைய செய்திகள்

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி

சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

DIN

சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவரான வீர சாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், "இந்தியத் தாயின் உண்மையான மகன்" என்றும், வெல்ல முடியாத துணிச்சலின் சின்னம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கடுமையான துன்பங்களை எதிர்கொண்டபோதும் வீரர் வீர சாவர்க்கரின் அசைக்க முடியாத மனப்பான்மையும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

இந்தியத் தாயின் உண்மையான மகனான வீர் சாவர்க்கருக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலிகள். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் எதிர்கொண்ட மிகக் கடுமையான பல கொடுமைகள் கூட தாய்நாட்டின் மீதான அவரது பக்தியை அசைக்க முடியவில்லை.

சுதந்திர இயக்கத்தில் அவரது அடங்காத துணிச்சல் மற்றும் போராட்டத்தின் வரலாறை நன்றியுள்ள தேசம் ஒருபோதும் மறக்காது.

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் அவரது தியாகமும், நாட்டிற்கான அர்ப்பணிப்பும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

SCROLL FOR NEXT