மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,927 கன அடியாக அதிகரித்துள்ளது. 
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத்துள்ளது.

DIN

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத்துள்ளது.

புதன்கிழமை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,070 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, வியாழக்கிழமை காலை வினாடிக்கு 4,927 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் திறப்பைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நீர் வரத்து அதிகரித்துள்ளதால் புதன்கிழமை 111.60 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 112.18 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 81.55 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப்: தில்லி அரசு ரூ. 5 கோடி நிதியுதவி

ஓணம் பரிசு... பூஜா!

10 நாள்களுக்கு ரயில்களின் இயக்கம் மாற்றம்! சென்னை மெட்ரோ அறிவிப்பு

பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறைச் செயலர்! யார் இந்த ஷபானா மஹ்மூத்?

கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT