நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழையால் அணைகளின் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழையால் அணைகளின் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 87.89 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 108.10 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 136.84 அடியாகவும் உயர்ந்துள்ளது
அதாவது பாபநாசம் அணை நீர்மட்டம் 5 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 16 அடியும் ஒரே நாளில் உயர்ந்துள்ளது. அதேசமயம் புதன்கிழமை மழை சற்று குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்தும் சரிந்துள்ளது.
மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1,424 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.