திபெத்தில் நிலநடுக்கம் 
தற்போதைய செய்திகள்

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

திபெத்தில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

திபெத்: திபெத்தில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தொலைதூர இமையலைப் பகுதியான திபெத்தில் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை காலை 3.11 மணியளவில் திபெத்தின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, மே 27 ஆம் தேதி 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திபெத் மற்றும் நேபாளத்தின் நிலப்பரப்பானது பூமிக்கு அடியிலுள்ள இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் உரசிக்கொள்ளும் பெரும் புவியியல் பிளவுக் கோட்டின் மீது அமைந்துள்ளது. இதனால், இவ்விரு நாடுகளிலும் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது .

பூமி அமைப்பு மிகவும் சிக்கலானது, மேலும் பூகம்பங்களை நாம் கணிக்க முடியாது. இருப்பினும், திபெத்தில் பூகம்பங்களுக்கு என்ன காரணம் என்பதை நன்கு புரிந்துகொள்ளவும், பூகம்பங்களால் ஏற்படும் நடுக்கம் மற்றும் தாக்கங்களை நன்கு புரிந்துகொள்ளவும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று டெக்சாஸ் பல்கலைக்கழக புவியியல் அறிவியல் பேராசிரியர் கார்ப்ளஸ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT