ஆப்ரேஷன் சிந்தூர் நிகழ்வை கௌரவிக்கும் வகையில் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள். 
தற்போதைய செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூரை கௌரவிக்கும் வகையில் 500 என்சிசி மாணவர்கள் யோகா!

ஆப்ரேஷன் சிந்தூர் நிகழ்வை கௌரவிக்கும் வகையில் கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

DIN

ஆப்ரேஷன் சிந்தூர் நிகழ்வை கௌரவிக்கும் வகையில் கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்றது இதுவே முதல்முறை.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளக்கரையில் சனிக்கிழமை காலை 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த யோகா நிகழ்ச்சி ஆபரேஷன் சிந்தூர் நிகழ்வினை கெளரவிக்கும் வகையிலும், அதில் கலந்து கொண்ட நபர்களை கௌரவிக்க வகையிலும் நடைபெற்றது.

இந்த யோகா நிகழ்ச்சியில் மூன்று விதமான யோகவுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பட்டதாக மருத்துவர் கார்த்திகா தெரிவித்தார்.

இந்த யோகா நிகழ்ச்சியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT