தங்கம் விலை  ANI
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை நிலவரம்: இன்று கிராமுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை(நவ.1) பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையாகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை(நவ.1) பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. அக்.27-இல் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91,600, அக்.28-இல் பவுன் ரூ.3,000 குறைந்து ரூ.88,600-க்கும் விற்பனையானது. தொடா்ந்து புதன்கிழமை பவுனுக்கு ரூ.2000 உயா்ந்து ரூ.90,600-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.11,300-க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.90,400-க்கும் விற்பனையானது. வெள்ளிக்கிழமை மாற்றமின்றி அதே விலையிலே விற்பனையானது.

இந்த நிலையில், நவம்பர் மாதத்தின் முதல் நாளான சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. அதன்படி, அதன்படி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.11,310-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ1.66-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.1.66 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Gold price situation: How much has the 8 gram risen today?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

நாளை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

தில்லியில் கனரக பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை

SCROLL FOR NEXT