முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையாகிறது.

Updated On : 7 நவம்பர் 2025, 11:29 am IST
கோப்புப்படம் - PTI
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 குறைந்து புதன்கிழமை பவுன் ரூ.89,440-க்கு விற்பனையானது.

தொடா்ந்து வியாழக்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.11,250-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.90,000-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

இந்நிலையில், வா்த்தகம் நிறைவடையும் மாலையில் தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.11,320-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.90,560-க்கும் விற்பனையானது. அதன்மூலம், ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140, பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி, அதன்படி, கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,270-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலைவரம்

நேற்று வியாழக்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.165-க்கு விற்பனையான வெள்ளி விலையில் வெள்ளிக்கிழமை எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

The price of gold jewellery in Chennai fell by Rs 400 per sovereign on Friday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.