சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சுத்தமாக இல்லை என்றும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 65% அதிகரித்துள்ளது என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ சுந்தர் தெரிவித்தார்.
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, தமிழக பாஜக மகளிர் அணியினர் வெள்ளிக்கிழமை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய குஷ்பூ சுந்தர்,
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சுத்தமாக இல்லை என்றும் 2020-ம் ஆண்டிலிருந்து தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 65% அதிகரித்துள்ளது. 1% அல்ல, 65% அதிகரித்துள்ளது . "உங்க (ஸ்டாலின்) வீட்டில் ஒரு பெண் குழந்தைக்கோ, பெண்ணுக்கோ இந்த மாதிரி கொடுமை நடந்ததுக்கு அப்புறமும், '24 மணி நேரத்துல நாங்க பிடிச்சிட்டோம்' என்பதுதான் பதிலாக வருமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இன்று தமிழகத்தில் எந்தத் தாயும் பெண் குழந்தையை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டு, அது திரும்பி வரும்வரைக்கும் பயத்துடன் தான் இருக்கிறாள். ஸ்டாலின் அவர்களுக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தால், இனிமேல் அரசியலே பண்ண மாட்டேன் என்று சொல்லிட்டு வீட்டில் உட்கார வேண்டும். அதுதான் அவருக்கு அழகு.
பாஜக மகளிர் அணியினர், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை தங்களது போராட்டங்களைத் தொடர்வார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.