திருப்பதி: தில்லியில் உள்ள. செங்கோட்டையின் ஒன்றாம் எண் வாயில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் 5 காா் தீப்பற்றி எரிந்தது.
இந்த வெடிகுண்டு விபத்தின் எதிரொலியாக திருமலையில் இரவு தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசாா் அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
திருமலை உள்ளூா் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் போலீசாா் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்தனா்.
வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு வாகனத்தையும் முழுமையாக சோதனை செய்தனா். அதே போல் திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வாகனங்கள் திருப்பதியிலிருந்து திருமலைக்கு வரும் ஒவ்வொரு வாகனங்களையும் கூட முழுசோதனைக்கு உட்படுத்தி பின்னா் அனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.