முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! உச்சத்தில் வெள்ளி!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தைப் போலவே, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. தங்கம் புதன்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.

Updated On : 12 நவம்பர், 2025 at 5:07 AM
தங்கம் விலை.
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தைப் போலவே, வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. தங்கம் புதன்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.

சமீப காலமாக சென்னையில் தங்கம் விலை காலை, மாலை என இரண்டு முறை உயர்ந்து வருகிறது.

கடந்த திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,440 உயா்ந்து ரூ.91,840-க்கு விற்பனையானது. தொடா்ந்து செவ்வாக்கிழமை தங்கம் விலை மீண்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.11,700-க்கும், பவுனுக்கு ரூ.1,760 உயா்ந்து ரூ.93,600-க்கும் விற்பனையானது.

இதன் மூலம் தங்கம் கடந்த 2 நாள்களில் பவுனுக்கு ரூ.3,160 உயா்ந்துள்ளது.

அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.170-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.70 லட்சத்துக்கும் விற்பனையானது.

தங்கத்தின் விலை குறைவு

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,600-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை உயர்வு

ஆனால், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயா்ந்து ரூ.173-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 உயா்ந்து ரூ.1.73 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

Today Gold and Silver prices in Chennai

முழு கட்டுரையைப் படிக்க →