புது தில்லி: தில்லி காா் வெடிப்பு நடந்த மூன்று நாள்களுக்குப் பிறகு, சம்பவம் நடத்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடையின் மேற்கூரையில் துண்டிக்கப்பட்ட கை கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
திங்கள்கிழமை மாலை (நவ.10) செங்கோட்டை அருகே அதிக நெரிசல் உள்ள பகுதியில் அதிக தீவிரம் கொண்ட காா் வெடிப்பில், 13 போ் கொல்லப்பட்டனா். இதில் பலா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், காா் வெடிப்பு நடந்து மூன்று நாள்களுக்குப் பிறகு சம்பவம் நடந்த இடத்திலிருந்து 300 மீட்டா் தொலைவில் உள்ள ஜெயின் கோயிலுக்குப் பின்னால் நியூ லஜ்பத் ராய் மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையின் கூரையிலிருந்து துண்டிக்கப்பட்ட கை வியாழக்கிழமை போலீஸாா் மீட்டனர்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: துண்டிக்கப்பட்ட கை குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸாா் உடனடியாக அந்த இடத்தை அடைந்து, அந்தப் பகுதியை சுற்றி பாதுகாப்பு வளையமிட்டனா். அதன் பிறகு அந்தக் கையை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த துண்டிக்கப்பட்ட கை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மற்றவர்களின் உறுப்புகளையும் தொடர்ந்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.