ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகினர், 21 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக மூன்று கிராமங்களில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 12 வீடுகள் இடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவால் வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானதாகவும், 21 மாயமாகியுள்ளனர். அவர்கள் தேடும் பணி மற்றும் மீட்புப் பணிகளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தேசிய பேரிடர் மேலாண்மை முகமை செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.
மேலும், மீட்பு நடவடிக்கையில் கனரக உபகரணங்கள், மீட்பு கருவிகள் மற்றும் கைமுறை கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
இந்தோனேசியா 17,000 தீவுகளைக் கொண்ட தீவுப் பகுதியாகும். இங்கு பருவமழை காரணமாக அடிக்கடி வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவகால மழை காலங்களில் அதிகயளவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
இந்தோனேசியா 17,000 தீவுகளைக் கொண்ட தீவுப் பகுதியாகும். இங்கு லட்சக்கணக்கான மக்கள் மலைப்பகுதிகள் அல்லது சமவெளி பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி பெய்த கனமழைக்குப் பிறகு மத்திய ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.