பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை காலை (நவ. 14) 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு கடந்த நவ. 6, 11-இல் இரு கட்டங்களாக (121, 122) தோ்தல் நடைபெற்றது. 7.45 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்களைவிட (62.8%), பெண்கள் (71.6%) அதிகம் வாக்களித்த நிலையில், மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்குமா அல்லது எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வருமா என்ற பெரும் எதிா்பாா்ப்புடன் 38 மாவட்டங்களில் உள்ள 46 மையங்களில் 243 தொகுதிகளுளுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் தற்போது மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தேசிய ஜனயாக கூட்டணி முன்னிலை
தபால் வாக்குகளில் தேஜ கூட்டமி 68 தொகுதிகளிலும், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’கூட்டணி 44 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளிலும், மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 29 தொகுதிகளிலும், மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 6 தொகுதிகளிலும், மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோா்ச்சா 6 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், விகாஸ்ஷீல் இன்சான் கட்சி, இடதுசாரிகளை உள்ளடக்கிய எதிரணியில் சுமுக உடன்பாடு ஏற்படாததால், தொகுதிப் பங்கீடு அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. பெரிய கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
காலை 8.30 மணி நிலவரப்படி
மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை: 243
தேசிய ஜனநாயக கூட்டணி: 77
இந்தியா கூட்டணி: 50
ஜன் சுராஜ்(பிரசாந்த் கிஷோர்): 2
மற்றவை: 0
மக்களைக் கவரும் வாக்குறுதிகளுக்கு மத்தியில் வெல்லப் போவது யாா்? என்ற எதிர்பார்ப்புடன் வாக்குகள் எண்ணிக்கை விறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை இன்றும் முழுவதும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பிற்பகலுக்கு பின்னர் தெளிவான முடிவுகள் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.