தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது PTI
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.92,400-க்கு விற்பனையாகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.92,400-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை இந்த மாதம் தொடக்கம் முதலே உயா்ந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயா்ந்து ரூ.95,200-க்கு விற்பனையானது.

வெள்ளிக்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.11,840-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.94,720-க்கும் விற்பனையானது. தொடா்ந்து மாலையில் விலை மீண்டும் குறைந்தது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,740-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.93,920-க்கும் விற்பனையானது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160, பவுனுக்கு ரூ.1,280 குறைந்தது.

மீண்டும் பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது

இந்நிலையில், ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.1.520 குறைந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.11.550-க்கும், பவுனுக்கு ரூ.1520 குறைந்து ரூ.92,400-க்கும் விற்பனையாகிறது.

கடந்த இரண்டு நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 குறைந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு மீண்டும் ரூ.5 குறைந்து ரூ.1750-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.1.75 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Today gold and silver rate in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளைச் சிரிப்பு... மோக்.ஷிதா!

சாமந்தியின் ரசிகை... நவ்யா நாயர்!

ஆறு கஜ சேலை அழகு... பிரியா ஹெக்டே!

அலைபாயுதே... ஐஸ்வர்யா ராணி!

யார் இவர், தெரிகிறதா?... விஜய் வர்மா!

SCROLL FOR NEXT