சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்தது. 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.93,040-க்கு விற்பனை...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.93,040-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த நவ. 19-இல் பவுனுக்கு ரூ.1,600 உயா்ந்து ரூ.92,800-க்கு விற்பனையானது. தொடா்ந்து நவ. 20-இல் பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலை மீண்டும் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.91,680-க்கும் விற்பனையானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கத்தின் விலை மீண்டும் பவுன் ரூ.92,000-க்கு கீழ் சென்றது.

இந்நிலையில், சனிக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்தது.

அதன்படி, கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.11,630-க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.93,040-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

அதேபோல, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.172-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3,000 உயர்ந்து ரூ.1.72 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Gold Today Rate, November 22: Check 22 arat gold prices Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசியவாத காங்கிரஸ் இணைகிறதா? பாஜகவுடன் கூட்டணி தொடருமா? சரத் பவார் பேட்டி!

என் சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்

வாளையாறு அருகே ரயில் மோதி குட்டி யானை பலி: ஏஐ கண்காணிப்பை மீறி விபத்து!

லிபியா சர்வாதிகார அதிபர் கடாஃபியின் மகன் சுட்டுக்கொலை!

ஜொலிக்கும் தங்கம் விலை! இருளில் பொற்கொல்லர் வாழ்க்கை!!

SCROLL FOR NEXT