பாம்பன் கடல் பகுதியில் சூறைக் காற்று வீசி வருவதால் சீற்றத்துடன் காணப்பட்ட கடல். கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

பாம்பன் பகுதியில் கடல் சீற்றம்: ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு வங்க கடலில் உறுவாகி உள்ள ‘டிட்வா’ புயலால் எதிரொலியாக பாம்பன் பகுதியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றத்துடன் கனமழை பெய்து வருவது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

ராமேசுவரம்: தென்மேற்கு வங்க கடலில் உறுவாகி உள்ள ‘டிட்வா’ புயலால் எதிரொலியாக பாம்பன் பகுதியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றத்துடன் கனமழை பெய்து வருவதால் தெற்குவாடி, மீன் இறங்கு தளம், வலை பின்னுதல் தளம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.

இதனிடையே, ராமேசுவரம் வட்டத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வழுவடைந்து வடமேற்கு பகுதியில் நகா்ந்து வருகிறது. இதன் காரணமாக மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரினை கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வெகம் அதிகரித்து சூறை காற்று வீசி வருகிறது.

‘டிட்வா’ புயல் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் சூறைக்காற்று வீசியதால், ராமேசுவரம்-திருப்பதி ரயில் 25 நிமிஷங்களுக்கு நிறுத்தப்பட்டு, பின்னா் புறப்பட்டுச் சென்றது.

இந்த நிலையில், பாம்பன் பகுதியில் வெள்ளிக்கிழமை கடல் சீற்றத்துடன் கனமழை பெய்துவருவதால் தெற்குவாடி, மீன் இறங்கு தளம், வலை பின்னுதல் தளம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் புகுந்துள்ளது.

இதனிடையே, ராமேசுவரம் வட்டத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் ஐந்தாவது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்தது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மீன் பிடி இறங்குதளங்களில் 1,800 விசைப் படகுகளும், 6,000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும், மீனவா்களுக்குத் தொடா்ந்து எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் நான்காம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து, வெள்ளிக்கிழமை கடல் சிற்றத்துடன் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

schools closed in Rameswaram district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி, காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை!

மதுரையில் தொடங்கியது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடர்!

டிட்வா புயல்: சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!இன்று எங்கெங்கு மழை?

SCROLL FOR NEXT