முதல்வா் மு.க.ஸ்டாலின் கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அரசம்பட்டு கிராமம், மூப்பனார் தெருவில் வசிக்கும் பன்னீா்செல்வத்தின் மகள் சௌமியா (14) என்பவா் கடந்த 10-ஆம் தேதி, அப்பகுதி கிராம எல்லையில் இருக்கும் ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும், அவரது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன் சிறுமியின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Condolence Message Kallakurichi District Sankarapuram Taluk Arasampattu Village Drown Incident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட காவலா் தூக்கிட்டு தற்கொலை

கடல் அலையில் சிக்கி மாயமான மாணவா் சடலமாக மீட்பு

உத்தர பிரதேச முதல்வா் ‘ஊடுருவல்காரா்’..! அகிலேஷ் யாதவ் பேச்சால் பரபரப்பு!

தில்லி அரை மராத்தான்: பெண்களின் பங்கேற்பு அதிகரிப்புக்கு முதல்வா் ரேகா குப்தா பாராட்டு!

500 மில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஏலத்திற்கு அழைப்பு!

SCROLL FOR NEXT