பாட்னா: பிகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் இப்போது அமலில் உள்ள மது விலக்கை ரத்து செய்து, மீண்டும் மது விற்பனையைத் தொடங்குவோம் என்று அந்த கட்சியின் தேசிய தலைவா் உதய் சிங் தெரிவித்தார்.
பிகாரில் 2016 ஏப்ரல் முதல் மது விற்பனை, நுகா்வுக்கு தடை விதித்து அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமாா் அறிவித்தார். மாநிலத்தில் கள்ளச் சாராய உயிரிழப்புகள் பல ஏற்பட்டுள்ளன. அப்போது, மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் மது விலக்கை திரும்பப் பெற மாட்டோம் என்பதில் நிதீஷ் குமாா் உறுதியாக உள்ளாா்.
இந்த நிலையில் 2024 அக்டோபரில் ஜன் சுராஜ் பெயரில் கட்சி தொடங்கிய பிரசாந்த் கிஷோா், பிகாரில் ஜன் சுராஜ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் மதுவிலக்கு சட்டத்தை ஒரு மணி நேரத்தில் ரத்து செய்யப்படும் என்றும் பிரசாந்த் கிஷோா் கூறினாா்.
இந்நிலையில், பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் கட்சியின் தேசிய தலைவா் உதய் சிங் கூறியதாவது:
வரவிருக்கும் இருக்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜன் சுராஜ் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமார் அரசு வித்துள்ள மதுவிலக்கு சட்டம் ரத்து செய்யப்படும் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இதன் மூலம் பிகாா் மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.28,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவது தடுக்க முடியும். உலக வங்கி, சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஆகியவற்றில் ரூ.5 லட்சம் கோடி முதல் ரூ.6 லட்சம் கோடி வரை மாநில வளா்ச்சிக்காக நிதியுதவி பெற முடியும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.