சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 94,880-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக கடந்த 7 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.90,000-ஐ கடந்த நிலையில், தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600-க்கு விற்பனையானது.
இந்நிலையில், புதன்கிழமை அதிரடியாக மீண்டும் பவுனுக்கு ரூ.280 உயா்ந்து, ரூ.94,880-க்கு விற்பனையாகிறது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ரூ.11,860-க்கும் , பவுனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.94,880-க்கும் விற்பனையாகிறது.
புதிய உச்சத்தில் வெள்ளி
அதேபோல், வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த மாத தொடக்கில் இருந்து அதிரடி உயர்வை கண்டு வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.207-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 உயா்ந்து ரூ. 2,07,000-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.