பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கான 122 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை(அக்.20) முடிவடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். நவ.6 ஆம் தேதி நடைபெறும் முதல் கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும், நவ.11 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும்.
தேர்தலில் பதிவான வாக்குகள் நவ.14 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்.17 கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை அக்.18 இல் நடைபெறும், வேட்புமனுவைத் திரும்பப் பெற அக்.20 கடைசியாகும்.
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அக.20 கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை அக்.21 இல் நடைபெரும். வேட்மனுவைத் திரும்பப் பெற அக்.23 கடைசி நாளாகும்.
இந்நிலையில், இரண்டாம் கட்டத்திற்கான 122 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை(அக்.20) முடிவடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலத்தின் 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் நவம்பர் 11 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வேட்பாளர்கள் அக்டோபர் 23 ஆம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.
இதற்கிடையில், 121 தொகுதிகளை உள்ளடக்கிய முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி திங்கள்கிழமை(அக்.20).
பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தேர்தல் பிரசாரத்திற்காக தங்கள் நட்சத்திர பிரசார பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தீபாவளிக்குப் பிறகு பிரசாரம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், மாநிலத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக காவல்துறை மற்றும் மாநிலத்தில் உள்ள பல்வேறு அமலாக்கத் துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றன.
வருமான வரித் துறை, மாநில காவல்துறை மற்றும் கலால் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்டோபர் 6 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை ரூ.2.73 கோடி கோடி பணம், ரூ.22 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.16.21 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பொருட்கள் மற்றும் ரூ.5 கோடி மதிப்புள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்படிருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள பரிசுகள் மற்றும் இலவசப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.