புது தில்லி: தில்லி நகரின் கீதா காலனி பகுதியில் உள்ள ராணி கார்டன் குடிசைப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், வியாழக்கிழமை அதிகாலை 1.5 மணிக்கு கீதா காலனியில் உள்ள ராணி கார்டனின் குடிசைப் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தொலைபேசியில் அழைப்பு வந்தது.
தகவலை அடுத்து எட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால், 400 குடும்பங்கள் வசிக்கும் அந்த பகுதியில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை.
தீ விபத்து நிகழ்ந்த பகுதியில் உள்ள பழைய இரும்பு கிடங்கில் தான் முதலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.