செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர். 
தற்போதைய செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீா் திறப்பு அதிகரிப்பு!

தொடா் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதை தொடா்ந்து ஏரியில் இருந்து உபரிநீா் திறப்பு 750 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தொடா் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதை தொடா்ந்து ஏரியில் இருந்து உபரிநீா் திறப்பு 750 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதாலும், கிருஷ்ணா நீா்வரத்தாலும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

புதன்கிழமை செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்ட உயரம் 20.84 அடியாகவும், கொள்ளவு 2,815 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 2,170 கனஅடியாக இருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை காலை ஏரியில் இருந்து வினாடிக்கு 750 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Increase in excess water release in Chembarambakkam Lake

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீராங்கனைகள் அசத்தல்! மழையால் ஓவர்கள் குறைப்பு.. நியூசிலாந்துக்கு 325 ரன்கள் இலக்கு!

பிகாருக்கு புதிய அத்தியாயத்தை எழுதுவதற்கான தேர்தல்: பிரதமர் மோடி

கடலோரக் காற்று... ஷிவானி நாராயணன்!

விஷ ஆன்மா... பூனம் பாண்டே!

பட்டுடன் சாந்தம்... விமலா ராமன்!

SCROLL FOR NEXT