மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டை ரசாயன தொட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலத்த காயங்களுடன் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகித்தை பெற்று வரும் தொழிலாளர்கள். 
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் வெடி விபத்து: பலர் காயம்

மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் சனிக்கிழமை ரசாயன தொட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் சனிக்கிழமை ரசாயன தொட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். நல்லவாய்ப்பாக பெரும் அசாம்விதங்கள் எதுவும் நிகழவில்லை.

மேட்டூர் அருகே கருமலைக்கூடல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் மற்றும் உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்குள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை 10-க்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை பார்த்துவந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ரசாயன தொழிற்சாலை பாய்லர் வெடித்து சிதறியது. இதில், பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்களான ராகேஷ், சல்மான் ஆகிய இரண்டு பேருக்கும் காலில் ரசாயனம் பட்டதில் பாதிப்புக்குள்ளாகினர்.

மேலும், பலர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் எதுவும் நிகழவில்லை என கூறப்படுகிறது.

மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Several people were injured in an explosion in a chemical tank at the Sidco Industrial Estate near Mettur on Saturday.

தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு 800 உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள நீரில் மூழ்கிய வெளிதாங்கிபுரம் தரைப்பாலம் ஆபத்தை அறியாமல் செல்லும் பள்ளி மாணவிகள்

இந்த ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

தொடா் மழையால் அழுகிய நெல் கதிா்களை டிராக்டா் மூலம் உழுத விவசாயி

தொலைக்காட்சி சேனல்களின் வருவாயை மேம்படுத்த புதிய டிஆா்பி வழிகாட்டுதல்கள்!

கரீபியன் கடல் செல்லும் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்

SCROLL FOR NEXT