ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நினைத்தாலே இனிக்கும் தொடர் 1417 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.
கடந்த 2021 ஆகஸ்ட் முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவந்த நினைத்தாலே இனிக்கும் தொடர் கடந்த வார இறுதியில் நிறைவடைந்தது.
இந்தத் தொடரில் ஸ்வாதி சர்மா, ஆனந்த் செல்வன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வந்தனர்.
அடுத்தடுத்த திருப்பங்களைக் கொண்டு திகில் மற்றும் மர்மங்கள் நிறைந்த காட்சிகள் கொண்டு ஒளிபரப்பப்பட்டு வந்த, இந்தத் தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
இயக்குநர் பிரியன் இயக்கிய இத்தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நினைத்தாலே இனிக்கும் தொடர் அதிரடியான திருப்புமுனை காட்சிகளுடன் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது.
சமீபகாலமாக, தொடங்கப்படும் தொடர்கள் குறுகிய காலத்தில் முடிக்கப்படும் சூழலில், நினைத்தாலே இனிக்கும் தொடர்,4 ஆண்டுகளுக்கும் மேலாக விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.