முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த துணை மேற்போர்வை குழுவினா்  
தற்போதைய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில் துணை மேற்பார்வை குழு ஆய்வு!

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் 5 பேர் கொண்ட துணை மேற்போர்வை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இணையதளச் செய்திப் பிரிவு

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் கிரிதர் தலைமையில் 5 பேர் கொண்ட துணை மேற்பார்வை குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

பெரியாறு வைகை படுகை வட்ட மேற்பார்வை பொறியாளர் சாம் இர்பின், கம்பம் கோட்டம் முல்லைப் பெரியாறு அணையின் செயற்பொறியாளர் செல்வம் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவினர் முல்லைப் பெரியாறு அணைக்கு தேக்கடி படகுத் துறையில் இருந்து படகு மூலமாக அணைக்கு சென்றனர்.

முல்லைப் பெரியாறு அணைக்கு தேக்கடி படகுத் துறையில் இருந்து படகு மூலமாக அணைக்கு சென்ற துணை மேற்பார்வை குழுவினர்.

தொடர்ந்து பிரதான அணை, பேபி அணை, வல்லக்கடவு சாலை சீரமைத்தல், அணைக்கு நீர்வரத்து, அணையின் நீர்மட்டம் உள்ளிட்ட 13 பராமரிப்பு பணிகளை குறித்து தொடர்ந்து மேற்பார்வை செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வில் கேரளத்தை சேர்ந்த இடுக்கி கட்டப்பனை நீர் பாசனத்துறை லிவின்ஸ் கோட்டார், துணை கோட்ட பொறியாளர் ஜித் ஆகியோர் கொண்டனர்.

A five-member sub-committee of the National Dam Safety Authority inspected the Mullaperiyar Dam on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

9 மாநில விருதுகளை வென்ற மஞ்ஞுமல் பாய்ஸ்!

சுற்றுலா தருணங்கள்... ரைசா வில்சன்!

SCROLL FOR NEXT