செப்.26 இல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது. 
தற்போதைய செய்திகள்

செப்.26 இல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 44 ஆவது கூட்டம் தில்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 44 ஆவது கூட்டம் தில்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கா்நாடகம் இடையேயான காவிரி நதிநீா் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

இதனையடுத்து இந்த இரண்டு அமைப்புகளும் அவ்வப்போது கூடி முடிவுகளை மேற்கொண்டு வருகின்றன.

காவிரி நீா் மேலாண்மை ஆணையம் இதுவரை 43 முறை கூட்டியுள்ளது.

இந்நிலையில், காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 44 ஆவது கூட்டம் தில்லியில் செப்டம்பா் 26 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு அதன் தலைவா் எஸ்.கே ஹல்தாா் தலைமையில் தில்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டடத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் செயலர் டி. டி .சா்மா தகவல் அனுப்பியுள்ளாா்.

Cauvery Water Management Authority to meet on September 26

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத, ஜாதி ரீதியான அரசியல் நடத்தி வெற்றி பெற நினைக்கிறது ஆா்ஜேடி! - மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்

அடிப்படை வசதிகள் இல்லாத மேல்மருவத்தூா் ரயில் நிலையம்!

போலி தங்க நகையை அடகு வைத்த இளைஞா் கைது!

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: மேக்சிஸ் நிறுவனத்துக்கு தில்லி நீதிமன்றம் புதிதாக சம்மன்!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு

SCROLL FOR NEXT