விஜய் 
தற்போதைய செய்திகள்

இனி விஜய்யின் பேச்சு தொடருமா?

விஜய்யின் அடுத்த பரப்புரைகளின் நிலை குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் சம்பவத்தால் விஜய்யின் அடுத்தடுத்த பரப்புரைகள் கேள்விக்குள்ளாகியுள்ளன.

நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 39 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

இந்த பலிகளுக்கு விஜய்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆளுங்கட்சியின் மோசமான செயல்பாடுகள்தான் இழப்பிற்குக் காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேநேரம், சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்றிருக்க வேண்டிய விஜய் அவசரமாக சென்னை கிளம்பினார். மாநில முதல்வர் சென்னையிலிருந்து கரூர் வந்து பலியானர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னதுடன் பத்திரிகையாளர்களையும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பினார்.

ஆனால், விஜய்யிடமிருந்து ஒரு அறிக்கையைத் தவிர வேறு எதுவும் வராதது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, கரூரில் நடந்த கோரமான சம்பவத்தைத் தொடர்ந்து இனி விஜய்யின் அடுத்தடுத்த பரப்புரைகள் பாதிக்கப்படும் என்றே தெரிகிறது.

தற்போதைய சூழலில் விஜய் நேரில் சென்றால் மீண்டும் நெரிசல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி பிற பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கரூர் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலர் ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The Karur incident has called into question Vijay's next campaigns.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமுதே... அன்னா பென்!

கரூர் பலிக்கு 5 காரணங்கள்? பிரேமலதா விளக்கம்

அனுபவமுள்ள கட்சிகளைப் பார்த்து புதிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்! - EPS

கரூர் பலி: காங்கிரஸ் ரூ. 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

தேவரா 2 தொடக்கம்: அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!

SCROLL FOR NEXT