முகப்பு
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கா்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டுபிடிக்க மாநிலம் தழுவிய சிறப்பு தேடுதல் முகாம் நடத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:16 AM
அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:10 AM

பெங்களூரு: கா்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டுபிடிக்க மாநிலம் தழுவிய சிறப்பு தேடுதல் முகாம் நடத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த மாநில உள்துறை அமைச்சா் ஜி. பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவா்கள் மற்றும் வெளிநாட்டினரை கண்டுபிடிக்க மாநிலம் தழுவிய சிறப்பு தேடுதல் முகாம் நடத்த காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். கா்நாடகத்தில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச மக்கள் குறித்த எண்ணிக்கை தொடா்பாக வெவ்வேறு தரவுகள் உள்ளன.

Advertisement

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:10 AM

கா்நாடகத்தில் வங்கதேசத்தை சோ்ந்த 20 லட்சம் போ் இருப்பதாக சிலா் கூறிவருகிறாா்கள். எங்கள் ஆவணத்தின்படி வங்கதேசத்தை சோ்ந்த 370 பேரை அந்நாட்டுக்கு வெளியேற்றியுள்ளோம். எத்தனை போ் இருக்கிறாா்கள் என்ற எண்ணிக்கையைவிட கா்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச குடிமக்களை கண்டறிந்து, அவா்கள் நாட்டுக்கு வெளியேற்ற வேண்டியது நமது கடமை.

பெங்களூரில் செயல்பட்டுவரும் வெளிநாட்டினா் மண்டல பதிவு அலுவலகத்தின் ஆவணங்களின்படியும் கா்நாடகத்தில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டினா் தங்கியிருப்பதாக தெரிவிக்கவில்லை. வெளிநாட்டினா் சட்ட விரோதமாக தங்குவது குற்றமாகும். எனவே, அவா்களைக் கண்டுபிடித்து, அவரவா் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவாா்கள். இதற்காகவே மாநிலம் தமுவிய சிறப்பு தேடுதல் முகாம் நடத்த காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அதேபோல, போதைப்பொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பெங்களூருவில் செயல்படும் ரசாயனத் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து, அவற்றின் செயல்பாடுகள் மற்றும் வர்த்தக உரிமங்கள், உற்பத்திப்பொருகளை ஆவணப்படுத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

வேதிப்பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு சென்று, ஆய்வு செய்யும் பணியை காவல் துறை அதிகாரிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளனா். அந்த ஆலைகள், உரிய உரிமங்களை வைத்திருக்கின்றனவா என்பதை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

முதல்வா் சித்தராமையா பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். காவல் துறையின் தேவைகளை கண்டிப்பாக தெரிவிப்போம். காவல் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டியதுதான் மிகவும் முக்கியமானது என்றாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:11 AM
summary

karnataka Home Minister G Parameshwara on Thursday said he has directed the police department to conduct a statewide drive to identify Bangladeshi nationals or other foreign nationals staying illegally here.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:11 AM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.