பத்ராபூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகிய புத்தா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம். 
தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் புத்தா விமான விபத்து: நல்வாய்ப்பாக 55 பேரும் பாதுகாப்பாக மீட்பு!

நேபாளத்தில் விமான தறையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த 55 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

நேபாளத்தில் விமான தறையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த 55 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 51 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்களுடன் பத்ராபூர் விமான நிலையத்திற்குப் புறப்பட்ட புத்தா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம், வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக நிறுத்தினார். விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுமார் 200 மீட்டர் தொலைவில் தரையிறக்கப்பட்டது. இதில், விமானம் சிறியளவில் சேதம் ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக விமானம் நிறுத்தப்பட்டதும் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

விமானியின் சாதுர்யமான செயல்பாட்டால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

காத்மாண்டுவில் இருந்து தொழில்நுட்ப மற்றும் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானம் ஓடுபாதையைத் தாண்டி சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு சிற்றாறுக்கு அருகில் தரையிறங்கியது, இந்தச் சம்பவத்தின் போது விமானத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டது.

ஜூலை 2024--ல், சௌரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது, இதில் விமானத்தில் இருந்த 19 பேரில் 18 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 2023-ல், ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் போக்காராவில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது, இதில் விமானத்தில் இருந்த 68 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட அனைவரும் உயிரிழந்தனர்.

The plane carried 51 passengers and four crew members; all are safe, Nepal's Buddha Air said

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 போட்டிகளில் 4 சதங்கள்... உலகக் கோப்பையில் தேர்வாகுவாரா தேவ்தத் படிக்கல்?

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் முதன்முறையாக ஸ்கோர் போர்டு அறிமுகம்!

ரஜினியுடன் 7-வது முறையாக இணைந்த அனிருத்!

முன்னாள் அமைச்சர் கொலையில் தொடர்புடைய மூத்த தளபதி உள்பட 20 மாவோயிஸ்டுகள் சரண்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 20

SCROLL FOR NEXT